வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்திய பெண் எழுத்தாளர் கொலை: மேலும் 4 பேர் கைது

இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி கொல்லப்பட்டது தொடர்பாக மேலும் 4 பேரை ஆப்கன் போலீஸார் கைது செய்தனர்.

Updated On :12 செப்டம்பர் 2013, 2:42 am IST

இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி கொல்லப்பட்டது தொடர்பாக மேலும் 4 பேரை ஆப்கன் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நவாப், ரிஷி கான், முகமது ரஹீம் மற்றும் மீர் ஹம்ஸா ஆகிய 4 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களையும் சேர்த்து, இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலையில், ஹக்கானி கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என ஆப்கன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்தது தொடர்பாக சுஷ்மிதா பானர்ஜி எழுதிய புத்தகம் பின்னர் திரைப்படமாக வெளிவந்தது. அதில் தீவிரவாதிகளை கடுமையாக சாடியிருந்ததாக காட்டப்பட்டிருந்தது. அதனால், ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் சுஷ்மிதா பானர்ஜியை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.