வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சமாஜவாதி கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் அஸம் கான்

சமாஜவாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான அஸம் கான் புறக்கணித்தார்.

Updated On :12 செப்டம்பர் 2013, 12:58 am IST

சமாஜவாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான அஸம் கான் புறக்கணித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர்நகரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட கலவரத்தை மாநில அரசு சரியான முறையில் கையாள தவறியதும், சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாம் சிங் யாதவ், விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலுடன் நடத்திய சந்திப்பும் அஸம் கானின் அதிருப்திக்கு காரணம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் அங்கு அசாதாரனமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் சமாஜவாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆக்ராவில் புதன்கிழமை கூடியது.

இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் ராம்கோபால் யாதவ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தின் முதல் நாளில் நாட்டின் அரசியல் நிலவரம், பொருளாதார சரிவு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

106 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழுவில் 26 பேர் மட்டும் பங்கேற்கவில்லை என்பதால் எந்தவித மாற்றமும் ஏற்படபோவதில்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சியின் பலத்தை குறைக்க காங்கிரஸ் கட்சி எதையும் செய்யும்.

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே முன்றாவது அணி அமைப்பது குறித்து கட்சி முடிவு செய்யும். தற்போது, கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படு வருகிறது என்று ராம்கோபால் யாதவ் கூறினார்.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க சமாஜவாதி கட்சி ஆதரவு அளிக்குமா என்று கேள்விக்கு ராம்கோபால் யாதவ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.