வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஜாமீன் கோரி ஜெகன்மோகன் மனு

சொத்தக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை ஜாமீனில் வெளிவிட வேண்டும் எனக் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Updated On :12 செப்டம்பர் 2013, 12:55 am IST

சொத்தக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை ஜாமீனில் வெளிவிட வேண்டும் எனக் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தன் மீதான ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐ முடித்து விட்ட நிலையில், தன்னை ஜாமீனில் விட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டார்.

இதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்

கொள்வதாகவும், இதுதொடர்பாக சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.

இதற்கிடையே சிபிஐ புதன்கிழமை மூன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை 8 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி கடந்தாண்டு மே 27ஆம் தேதி கைது செய்யப்பட்டு, ஹைதராபாதில் உள்ள சன்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த மே 9ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டியின் ஜாமீன் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக சிபிஐ புலனாய்வு செய்து 4 மாத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.