வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

முசாஃபர்நகர் கலவரம்: பொதுநல மனு மீது இன்று விசாரணை

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

Updated On :12 செப்டம்பர் 2013, 2:38 am IST

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

முசாஃபர்நகர் மாவட்டத்தில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை மோதல் வெடித்தது. அதில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும், இந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு வகை செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிடக் கோரி முகமது ஹாரூண் என்பவரும் மற்றும் சிலரும் பொது நல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கலவரத்தில் சுமார் 20,000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாற்காலிகமாக தங்கும் வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.