முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

எம்.பி. பதவியையும் பன்சால் ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக

முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சண்டீகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

Updated On :13 மே 2013, 3:18 am IST

முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சண்டீகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, சண்டீகர் பாஜக தலைவர் சஞ்சய் தாண்டன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

ரயில்வே வாரிய பதவியை பெற்றுத் தருவதற்காக ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டதாக முன்னாள் ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், தனக்கு வாக்களித்த பொதுமக்களின் நம்பிக்கையை பன்சால் இழந்துவிட்டார். எனவே, சண்டீகர் மக்களவை உறுப்பினர் பதவியையும் பன்சால் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.

 இதற்கிடையே, பாஜகவின் முன்னாள் படைவீரர் பிரிவு மற்றும் மருத்துவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் சண்டீகரில் பன்சாலுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.