மலேசியாவைச் சேர்ந்த, மூளைச் செயல்திறன் நோயால் பாதிக்கப்பட்ட 21 வயது பைலட், சிறிய ரக விமானம் மூலம் உலகத்தின் பாதியிடங்களைச் சுற்றி வந்துள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் அந்தோனி டான் (21) என்பவர், வணிகரீதியிலான விமானங்களை ஓட்டும் பைலட் ஆவார். அவர், டிஸ்லெக்சியா எனப்படும் மூளைச் செயல்திறன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், எண்களை வாசிப்பதிலும், குறியீடுகளைப் புரிந்துகொள்வதிலும் அவருக்குப் பிரச்னைகள் உள்ளன. எனினும், செஸ்னா-210 என்ற சிறிய ரக விமானம் மூலம் உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும் என்பதே அவரது லட்சியமாகும். அதன்படி, மலேசியாவின் லங்காவி நகரில் இருந்து அவர் கடந்த மார்ச் 26ஆம் தேதி தனது உலகம் சுற்றும் பயணத்தைத் தொடங்கினார். இதுவரை 6,400 கடல் மைல்களைக் கடந்துள்ள அவர் உலகின் பாதி இடங்களைச் சுற்றியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தானின் கராச்சசி நகரில் இருந்து நாகபுரி வழியாக கொல்கத்தா வந்தார். அங்கு, தனது விமானப் பயண அனுபவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களை ஊக்கப்படுத்த ஏதாவது செய்ய விரும்பினேன். எதுவுமே முடியாதது அல்ல என்ற தகவலை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்குக் கூற விரும்பினேன். இதற்காகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். குறுகிய காலத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. ரஷியாவில் இருந்து அலாஸ்கா நோக்கிப் பறந்தபோதும், உறைபனியைக் கண்டபோதும் வானிலை துணை நிற்குமா, எரிபொருள் போதுமா என்ற கவலைஏற்பட்டு என்னைப் பதற வைத்தது.
பனிக்கட்டிகள் நிறைந்த பகுதியைக் கடந்தபோது சூடேற்றும் கருவியைக் கொண்டு விமான என்ஜினைச் சூடாக்க வேண்டியிருந்தது. கையுறைகள் போதுமானதாக இல்லை. அங்கு தட்பவெப்ப நிலை மைனஸ் 30 டிகிரி செல்சியஸாக இருந்தது என்றார் ஜேம்ஸ் அந்தோனி.
ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில் பைலட் உரிமம் பெற்றுள்ள அவர் உலகம் முழுவதும் சிறிய ரக விமானத்தில் தனிநபராகப் பறந்தபடி சுற்றும் இளவயது நபர் நான் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். அவர் இம்மாதம் 15ஆம் தேதி, தாய்லாந்தின் புக்கெட் வழியாக மலேசியாவின் கோலாலம்பூருக்குத் திரும்புகிறார். அதன் பிறகு, மீதியுள்ள பகுதிகளைக் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



