குஜராத் மாநிலம் சபர்மதி அருகே இன்று ரயில்வே கேட் அருகே காத்திருந்த பள்ளி மாணவி, ரயிலில் அடிபட்டு இறந்தார்.
சபர்மதி அருகேயுள்ள நியூ ரனீப் பகுதியில் உள்ள சிவ-தர்ஷன் குடியிருப்பைச் சேர்ந்தவர் மான்ஷி திவாரி (14). இங்குள்ள ஞானதீப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று பிற்பகல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மான்ஷி, வீட்டு அருகேயுள்ள ரயில்வே கிராஸ்சிங் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், தனது சைக்கிளை நிறுத்தி அதன் மீது அமர்ந்திருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த ஆனந்த்- காந்திநகர் ரயிலியின் கடைசிப் பெட்டியின் படிக்கட்டுகள், மான்ஷியின் சைக்கிளின் முன் சக்கரத்தில் மாட்டியது. இதில் தூக்கி தரையில் வீசப்பட்ட மான்ஷி, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து சபர்மதி ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

