தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தாவூத் கார் பொது வெளியில் எரிக்கப்படும்: ஏலத்தில் எடுத்த இந்து தலைவர்

ஏலத்தில் எடுக்கப்பட்ட தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான கார் நாளை தில்லி அருகே எரிக்கப்படும் என இந்து தலைவர் சுவாமி சக்ரபாணி அறிவித்துள்ளார்.

News image
Updated On :22 டிசம்பர் 2015, 3:38 pm

ஏலத்தில் எடுக்கப்பட்ட தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான கார் நாளை தில்லி அருகே எரிக்கப்படும் என இந்து தலைவர் சுவாமி சக்ரபாணி அறிவித்துள்ளார்.

பிரபல தலைமறைவு குற்றவாளி தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான பொருள்கள் கடந்த 9 ஆம் தேதி மும்பையில் ஏலம் விடப்பட்டது.

அப்போது அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பச்சை வர்ண 'ஹூண்டாய் அக்ஸண்ட்' காரை ரூ. 32,000 செலுத்தி, மும்பையைச் சேர்ந்த `அகில இந்தியா இந்து மகாசபா' என்ற அமைப்பு ஏலத்துக்கு எடுத்தது.

அந்த காரை, ஆம்புலன்ஸாக மாற்றி பயன்படுத்துவது என அதன் தலைவர் சக்ரபாணி முடிவு செய்திருந்தார். இதனிடையே சக்ரபாணிக்கு தாவூத் கூட்டாளிகளிடமிருந்து மிரட்டல் வந்தது.

அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது அந்த காரை பொதுமக்கள் முன்னிலையில் எரித்து விடுவது என சக்ரபாணி தீர்மானித்துள்ளார். இதையடுத்து அந்த கார் சில நாள்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தில்லி எடுத்துச் செல்லப்பட்டது.

அந்த கார் காசியாபாத் அருகே இந்திராபுரத்தில் பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணிக்குள் பொதுமக்கள் முன்னிலையில் எரிக்கப்படும் என்றார் சக்ரபாணி.

தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளின் மிரட்டல் குறித்து கேட்டதற்கு, எனக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. எனக்கு யாரிடமும் பயமில்லை இல்லை என்றார் சக்ரபாணி. எனினும், தாவூத் கூட்டாளிகளின் மிரட்டல் குறித்து அவர் கடந்த 11 ஆம் தேதி தில்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.