நல்லெண்ணத்தின் அடிப்படையில், பிரிந்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மீண்டும் இணையும் என பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலர் ராம் மகாதேவ் கூறினார்.
இதுதொடர்பாக அவர் ஹோகாவில் உள்ள அல் ஜஹீரா தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணல் விவரம்:
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மீண்டும் ஒன்றிணைந்து அகன்ற பாரதம் உருவாகும் என ஆர்.எஸ்.எஸ். இன்றளவும் நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்ற அடிப்படையில் நானும் அதை நம்புகிறேன்.
எனினும், இந்த இணைப்பு எவ்வித போர் மூலமும் நிறைவேறாது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த நாடுகள் இணையும்.
இந்திய நாட்டில் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. இதை இந்து கலாச்சாரம் என்று அழைக்கிறோம். இந்தியா என்பது ஒரே தேசம், ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்.
இந்தியாவில், விருதுகளை ஒரு சிலரே திருப்பி தரும் நிலையில், பெரும்பாலானவர்கள் திருப்பி தரவில்லை. அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அவை திருப்பி அளிக்கப்படுகின்றன. ஆனால், அது தேசத்தை உலக அரங்கில் அவமதிக்கிறது என்றார்.
பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமரை திடீரென்று சென்று சந்திப்பதற்கு முன்றே இந்த நேர்காணல் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. அது நேற்று இரவு ஒளிபரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


