ஆன்மிக தலங்களான திருப்பதி- சீரடி இடையே நேரடி ரயில் போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது.
திருப்பதியில் நடைபெற்ற விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில் போக்குவரத்தை தொடக்கிவைத்தார்.
திருப்பதி-திருமலையில் அமைந்திருக்கும் ஸ்ரீவேங்கடேஸ்வரர் மற்றும் சீரடியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய்பாபா தலத்துக்கும் ஏராளமான ஆன்மிகவாதிகள் ஆண்டு முழுவதும் சென்று வருகின்றனர். ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் விரைவு ரயில் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, திருப்பதியில் நடைபெற்ற விழாவில் தொடக்கி வைத்தார்.
விழாவில் பேசிய அமைச்சர், ஏற்கெனவே வாக்களித்தப்படி ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து தருவதில் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்றார்.
ரயில் எண் 17417 திருப்பதி- சீரடி சாய்நகர் வாராந்திர விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை தோறும் திருப்பதியில் காலை 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு சீரடி சென்றடையும். ஜனவரி 5 ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படும்.
இதேபோல மறுமார்கத்தில் ரயில் எண் 17418 புதன்கிழமை தோறும் சீரடியில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருப்பதி சென்றடையும். இந்த ரயில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் இயக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


