சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

அதிகரிக்கும் கடன்: மின் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை

மின்சார விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காகவும், அந்த நிறுவனங்களின் கடன்கள் அதிகரித்து வருவது

Updated On :

மின்சார விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காகவும், அந்த நிறுவனங்களின் கடன்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் அவற்றின் உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
 மின்சார விநியோக நிறுவனங்களின் கடன்கள் ஒட்டுமொத்தமாக, ரூ. 3 லட்சம் கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கடும் நிதித் தட்டுப்பாடு காரணமாக, அந்த நிறுவனங்களால் மின்சாரத்தை விலை கொடுத்து வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.
 மின்சார நிறுவனங்களின் கடன்களை அடைத்தால் மட்டுமே "அனைவருக்கும் மின்சாரம்' என்ற இலக்கை எட்ட முடியும் என்பதால், அந்தக் கடன்களைத் தீர்ப்பதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 இந்நிலையில், ""மின்சார விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும், கடன்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் அந்த நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்'' என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 எனினும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கும் திட்டம் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும், அதற்கான தீர்வுகளை மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும் என்றும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.