
கலசா- பண்டூரி கால்வாய்த் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கர்நாடகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
கர்நாடகம்- கோவா இடையே நிலவும் மகதாயி-மலபிரபா நதிநீர் இணைப்புப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி, கலசா-பண்டூரி கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, 150-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் சங்கம், கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம், கர்நாடக பாதுகாப்பு அமைப்பு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்பட 1500 அமைப்புகள் ஆதரவு தெரிவித்து, முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்றதால், கர்நாடகம் முடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






