சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

பிகார் பேரவைத் தேர்தலில் மோடிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்:நிதீஷ் வலியுறுத்தல்

கடந்த மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றாத மோடிக்கு, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நிதீஷ் குமார் வலியுறுத்தினார்.

Updated On :

கடந்த மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றாத மோடிக்கு, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நிதீஷ் குமார் வலியுறுத்தினார்.

பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், பேரவைத் தேர்தலையொட்டிய தனது பிரசாரத்தை சமஸ்திபூர் மாவட்டம், கல்யாண்பூரில் சனிக்கிழமை தொடங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:

பிகார் தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்குள் தொகுதிகள் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் கருத்தொற்றுமை நிலவுகிறது.

மாறாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிகள் ஒதுக்கீட்டிலும், வேட்பாளர்கள் தேர்விலும் இன்னும் கருத்து வேறுபாடு நீடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் மீட்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மோடி அளித்தார்.

தாம் அளித்த வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதியைக்கூட இன்னும் நிறைவேற்றாத மோடிக்கு, எதிர்வரும் பிகார் பேரவைத் தேர்தலில் மாநில மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மேலும், மோடியின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மீண்டும் ஏமாறாமல், நல்லாட்சி அளித்துவரும் எங்களுக்கு மக்கள் மீண்டும் வெற்றியைத் தேடி தரவேண்டும் என்று நிதீஷ்குமார் பேசினார்.

பிரசாரத்தின்போது, கடந்த 10 ஆண்டுகால ஐக்கிய ஜனதா தள ஆட்சியில், சாலைப் போக்குவரத்து, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை நிதீஷ்குமார் பட்டியலிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.