தெலங்கானா, ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில்; 111 பேர் பலி

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் 111 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Updated on
1 min read

ஹைதராபாத் : ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் 111 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதில் தெலங்கானாவில் 66 பேரும், ஆந்திராவில் 45 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெலங்கானாவின் பேரிடர் மேலாண்மைத் துறையினர் கூறுகையில், மெஹபூபா மாவட்டத்தில்தான் அதிகளவில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாகவும், இங்கு மட்டும் 28 பேர் பலியானதாகவும், மேடக் மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com