மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேசியப் புலனாய்வு அதிகாரியின் மனைவி சாவு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தேசிய புலனாய்வு அதிகாரியின் மனைவியும் உயிரிழந்தார்.
Updated on
1 min read

புது தில்லி: துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தேசிய புலனாய்வு அதிகாரியின் மனைவியும் உயிரிழந்தார்.

தேசிய புலனாய்வு அமைப்பில் பணிக்கு சேர்ந்தவர் தான்சில் அகமது (45). சிலகாலம் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்டு உதவி கமாண்டராக பணிபுரிந்து வந்த அவர் மீண்டும் என்ஐஏ-வில் ஆய்வாளராக பணியமர்த்தப்பட்பட்டார்.

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி இரவு உறவினர் ஒருவரின் திருமண விழாவில், மனைவி ஃபர்ஸானா மற்றும் 2 குழந்தைகளுடன் கலந்து கொண்டுவிட்டு சஹஸ்பூருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் முன் இருக்கையில் அமர்ந்திருந்த  அகமதுவையும், அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினர். இச்சம்பவத்தில் காரின் பின் இருக்கையில் இருந்த அவரது குழந்தைகள் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இச்சம்பவத்தில் அகமது இறந்தார். படுகாயங்களுடன் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரது மனைவி அவர் இன்று மரணமடைந்தார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது என்றனர். மேலும், இதுதொடர்பாக அகமதுவின் உறவினர் ரேஹன் உள்பட இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com