/

புற்றிங்கல் தேவி வெடி விபத்து: மத்திய அரசிடம் ரூ.117 கோடி உதவி கோரும் கேரளா

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள புற்றிங்கல் தேவி கோயில் வெடி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு ரூ.117 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2016, 10:32 am

கன்னூர் : கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள புற்றிங்கல் தேவி கோயில் வெடி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு ரூ.117 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

புற்றிங்கல் தேவி கோயில் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நிவாரண உதவி வழங்கவும், விபத்தில் சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கவும் ரூ.117 கோடி தேவைப்படுவதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த விபத்தில், ஏராளமான சொத்துக்கள் நாசமானதாகவும், ஏராளமானோர் தீக்காயம் அடைந்ததகாவும், இதில் பலர், தங்களது வாழ்நாளில் எந்த பணியுமே செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உம்மன் சாண்டி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.