புது தில்லி : மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நடிகரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி தொடர்ந்து விடுப்பில் இருப்பது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இன்று காலை மாநிலங்களவை கூடியதும், தனது உடல்நிலை காரணமாக தனக்கு மாநிலங்களவை நடவடிக்கையில் பங்கேற்பதில் விடுப்பு அளிக்குமாறு மிதுன் சக்ரவர்த்தி அனுப்பிய கடிதத்தை, அவைத் துணைத் தலைவர் குரியன் வாசித்தார்.
இதையடுத்து, சமாஜ்வாதித் தலைவர் நரேஷ் அகர்வால், மிதுன் சக்ரவார்த்தியின் நடவடிக்கையை கண்டித்ததோடு, ஒருவர் இவ்வாறு தொடர்ந்து விடுப்பில் இருப்பது சரியல்ல என்று கூறினார்.
மேலும், ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூடும்போது, தவறாமல் மிதுன் சக்ரவர்த்தி, இதுபோல கடிதத்தை அனுப்பிவிடுகிறார். உண்மையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் விடுப்பு எடுக்கலாம். ஆனால், ஒருவர் அவைக்கு வராமல், எம்.பிக்கான சலுகைகளைப்பெறுவது சரியல்ல என்று கூறினார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற புள்ளிவிவரத்தின் அடிப்படையில், மிதுன் சக்ரவர்த்திக்கு வெறும் 10 சதவீத வருகைப் பதிவு இருப்பதும், இதுவரை அவர் ஒரு விவாதத்திலும் பங்கேற்காததும், ஒருகேள்வியைக் கூட எழுப்பாததும், அவரது சார்பில் ஒரு மசோதா கூட நிறைவேற்றப்படாததும் தெரிய வந்துள்ளது.
இவரை விட, நடிகை ரேகாவுக்கு வெறும் 5 சதவீதமும், சச்சினுக்கு 7 சதவீதமும்தான் வருகைப் பதிவு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

