அவுரங்கபாத்: அவுரங்கபாத்தில் பெய்து வரும் இடைவிடாது மழையில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அவுரங்கபாத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் கோதாவரி நதியில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறுகின்றது. இதனால் அணைகள் வெகமாக நிரம்பி வருவதால் அருகில் உள்ள மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவுரங்கபாத் மாவட்ட ஆட்சியர் வெளிட்ட தகவல்:
கனமழை காரணமாக பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் அதிகப்படியான நீரால் அருகில் உள்ள கிராமங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வைஜாபூர் மற்றும் கங்காபூர் தாலுகாவில் வெள்ள நீர் வெளியேறி வருகின்றது. அதைத் தொடர்ந்து "ஜெயக்வாடி" அணை வேகமாக நிரம்பி வருகின்றது.
இதுவரை, 1600-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள கட்டுப்பாட்டு அறைகள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


