மும்பை: பணமதிப்பு நீக்க விவகாரம் பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கை என்று புகழ்ந்துள்ள ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அம்பானி, வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளையும் அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவன பங்குதாரர்களிடையே மும்பை அலுவலகத்தில் முகேஷ் அம்பானி இன்று உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
வரும் டிசம்பர் 4-ஆம் தேதி துவங்கி, புதிதாக ரிலையன்சின் ஜியோ நெட்வொர்க்கில் இணையும் அனைவருக்கும் அழைப்புகள், டேட்டா மற்றும் வீடியோ என அனைத்து சேவைகளும், மார்ச் 31, 2017 வரை இலவசமாக வழங்கப்படும்.
'ஜியோ ஹாப்பி நியூ இயர் ஆபர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சலுகையானது தற்போது ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் விரிவு படுத்தப்படும்.
பண மதிப்பு நீக்க விவகாரத்தைப்பொறுத்த வரை இது பிரதமர் மோடி எடுத்துள்ள மிக முக்கியமான நடவடிக்கையாகும். இது இந்தியர்களின் மனநிலையை மாற்றி அவர்களை, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை நோக்கி செலுத்தும். இதன் காரணமாக நேர்மையான, வலிமையான இந்தியாவையும், பொருளாதாரத்தையும் உண்டாக்க உதவும்.
மேலும் இது முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லா மட்டத்திலும் நம்பகத்தன்மையை உருவாக்கும்.
இவ்வாறு அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

வரலாற்றுச் சாதனையில் தமிழன்: கிறிஸ் கெயிலை முந்திய சாய் சுதர்சன்!

திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் ப்ளாஸ்ட்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


