கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலை: இந்தியா - ரஷியா விரைவில் ஒப்பந்தம்

கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலைகளை அமைக்கும் பொது செயல் திட்ட ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷியாவும் இம்மாதத்தில் (டிசம்பர்) கையெழுத்திடும் என்று தெரிகிறது.
கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலை: இந்தியா - ரஷியா விரைவில் ஒப்பந்தம்
Published on
Updated on
1 min read

கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலைகளை அமைக்கும் பொது செயல் திட்ட ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷியாவும் இம்மாதத்தில் (டிசம்பர்) கையெழுத்திடும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக இந்திய அணுசக்தித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலை அமைப்பது தொடர்பான பொது செயல் திட்ட ஒப்பந்தத்தில் டிசம்பர் இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார்.
முன்னதாக, இந்த ஆண்டில் புதின், இந்தியா வந்தபோது இது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடப்பு ஆண்டு இறுதிக்குள் கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலைகளை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அணுசக்தி நிறுவனம், ரஷிய அணுசக்தி நிறுவனமான "ரோசாடாம்' ஆகியவை பேச்சு நடத்தி வருகின்றன. கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்றது. கூடங்குளத்தில் முதல் இரு அணு உலைகள் ரூ.20,962 கோடி செலவில் அமைக்கப்பட்டன. 2013-ஆம் ஆண்டில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. 2-ஆவது அணு உலை கடந்த அக்டோபரில் செயல்பாட்டைத் தொடங்கியது. 3, 4-ஆவது அணு உலைகள் வரும் 2022-23-ல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 அணு உலைகளும் செயல்பாட்டுக்கு வந்தால் மொத்தம் 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com