
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவே தொடரும்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம், மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்த பிறகு நடைபெற்ற முதல் ஆய்வுக் கூட்டம் இதுவாகும். கூட்டத்துக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதம், 6.25 சதவீதமாகவே நீடிக்கும். இதேபோல், ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 5.75 சதவீதமாகவே தொடரும். வங்கிகள் தங்களிடம் டெபாசிட் செய்யப்படும் தொகையை ரொக்கமாக வைத்திருப்பதற்கான அளவை உயர்த்த வேண்டும் என்ற யோசனையைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி விகிதம், 7.1 சதவீதமாக இருக்கும். இதற்கு முன்பு 7.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.