/

அனைத்துப் பிரச்னைகளும் 50 நாட்களில் முடிவுக்கு வரும்: பிரதமர் மோடி மீண்டும் உறுதி

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் உண்டான அனைத்து பிரச்னைகளும் 50 நாட்களில் முடிவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

News image
Updated On :10 டிசம்பர் 2016, 7:23 am


அகமதாபாத்: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் உண்டான அனைத்து பிரச்னைகளும் 50 நாட்களில் முடிவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் பனஸ்கந்த் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சீஸ் உற்பத்தி ஆலையை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

துவக்க விழாவில் மக்களிடையே பேசுகையில், ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு குடியரசுத் தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.

அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் மறுப்பதால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்.

மின்னணு பண பரிமாற்றத்துக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நேர்மையான மக்கள் மத்திய அரசை ஆதரிக்கின்றனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பயங்கரவாத மற்றும் நக்ஸலிஸ அமைப்புகளின் முதுகெலும்புகள் உடைக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்துமே 50 நாட்களில் முடிவுக்கு வந்து விடும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், எதிர்கால சந்ததியினர் நிச்சயம் பயனடைவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.