தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி....

samuthirakani with arasan team

சமுத்திரக்கனி அரசன் படப்பிடிப்பில்

Published On :

நடிகர் சமுத்திரக்கனி அரசன் படப்பிடிப்பில் தன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் அரசன். வடசென்னை படத்துடன் இணைந்த கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி வருவதாக வெற்றிமாறன் தெரிவித்ததைத் தொடர்ந்து இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை இந்தாண்டு திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டு, விரைந்து படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்திருந்த நிலையில் சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது, அப்பிரச்னை முடிந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனி தன் பிறந்த நாளை அரசன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார். இதில், வெற்றி மாறன், சிலம்பரசன், ஆண்ட்ரியா, யோகி பாபு உள்பட வடசென்னை நடிகர்களும் உடனிருந்தனர்.

Story image

சமுத்திரக்கனி திருமண கோலத்தில் இருப்பதால் ராஜன் மறைவுக்குப் பின் சந்திராவை (ஆண்ட்ரியா) திருமணம் செய்யும் காட்சியாக இது இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

Actor Samuthirakani celebrated his birthday on the sets of the film Arasan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.