மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

நொய்டா ஆக்ஸிஸ் வங்கிக் கிளையில் சோதனை: மிகப்பெரிய மோசடி அம்பலம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் ஆக்ஸிஸ் வங்கியின் கிளையில் இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

Updated On :15 டிசம்பர் 2016, 9:46 am


நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் ஆக்ஸிஸ் வங்கியின் கிளையில் இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆக்ஸிஸ் வங்கிக் கிளையில் 20 போலி வங்கிக் கணக்குகளின் மூலம் ரூ.60 கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 10 வங்கிகளுடைய 50 வங்கிக் கிளைகளில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஒரு வங்கிக் கணக்கில் ஒரே நேரத்தில் அதிக மதிப்பிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டதை கணக்கெடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.