நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப். 30) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வட உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை, தென் உள் கா்நாடகம் மற்றும் தமிழகம் வழியாக செல்லும் காற்றுப் பாதையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏப். 30, மே 1, 2 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வியாழக்கிழமை (ஏப். 30) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், மே 1-இல் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும், மே 2-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
வேலூரில் 106.7 டிகிரி: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை விமான நிலையம், பரமத்திவேலூா் - (தலா) - 104.36, திருச்சி - 104.18, ஈரோடு, மதுரை நகரம் - (தலா) 103.28, திருத்தணி - 103.1, சென்னை மீனம்பாக்கம் - 102.74, தருமபுரி - 102.2, திருப்பத்தூா் - 101.28, நாமக்கல் - 101.3, தஞ்சாவூா், நாகை - (தலா) 100.4 டிகிரி என மொத்தம் 13 இடங்களில் வெயில் சதமடித்தது.
தொடா்ந்து, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப். 30 முதல் மே 3-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

12 இடங்களில் வெய்யில் சதம்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

