பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுக்கும் மத்திய அரசு: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் புகார்!

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவாகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க விடாமல் மத்திய அரசு தடுப்பதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம்... 

News image
Updated On :16 டிசம்பர் 2016, 9:58 am

புதுதில்லி: ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவாகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க விடாமல் மத்திய அரசு தடுப்பதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இன்று புகார் மனு அளித்தன.   

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவாகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் மற்றும் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிறைவேறவில்லை.

அரசின் இந்த போக்கை கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து புகார் மனு அளித்தன. இந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,   காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,   திரிணாமுல் காங்கிரசின் சுதீப் பந்தோபாத்யாய மற்றும் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் ஷரத் உயாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

அரசின் பிடிவாத போக்கின் காரணமாக, இந்த குளிர் கால் கூட்டத் தொடரில் மிக முக்கியமான விவகாரம் ஒன்றில் விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவாகாரத்தில்  சரியான விவாதம் நடக்க நங்கள் எங்களால் ஆன முயற்சிகளை எடுத்தோம். ஆனால் இந்த அரசானது ஜனநாயகத்தின் கொள்கைகளை முட்டுக்கட்டை போட்டு தடுத்து வருகிறது. நாடாளுமன்றம் செயல்படாததற்கு முழு பொறுப்பும் இந்த அரசையே சாரும்.என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.