புதுதில்லி: வரவிருக்கும் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு அதற்கு முன்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த மாதம் எட்டாம் தேதி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்பொழுது அவர் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற தகவலை வெளியிட்டார். அத்துடன் இந்த நடவடிக்கையானது அடுத்த 50 நாட்களில் பலனளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அந்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் வரவிருக்கும் ஆங்கிலப்புத்தாண்டைமுன்னிட்டு அதற்கு முன்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் நாளை அல்லது சனிக்கிழமை என்று உரையாற்றுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
ஆனால் அவர் தன்னுடைய உரையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு நாடு எவ்வாறு பயணிக்க உள்ளது என்பது பற்றிய செயல் திட்டம் குறித்து பேசுவார் என்றும், குறிப்பாக பணப்புழக்கத்தை அதிகரிப்பது குறித்து தகவல்களை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் நவம்பர் 8-ஆம் தேதி அறிவிப்புக்கு பிறகான பொருளாதார சூழலை மக்கள் எதிர் கொள்ள வேண்டியது பற்றியும்பேச வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை அன்று நிதி ஆயோக் குழு கூட்டத்தில் பொருளாதார நிபுணர்களை சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.

264 ரன்களை சேஸ் செய்தது எப்படி? பஞ்சாப் கேப்டனின் பேட்டி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


