தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 265 ரன்களை சேஸ் செய்த பிறகு பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “அவர்களால் முடியுமென்றால் நம்மாலும் முடியும் என்பதுதான் எனது நம்பிக்கையாக இருந்தது” என்றார்.
நேற்று தில்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தில்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 264 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த அணியாக வரலாறு படைத்துள்ளது. இதுவரை, 11 முறை 200க்கும் மேற்பட்ட இலக்கை சேஸ் செய்த ஒரே அணியாக பஞ்சாப் கிங்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை வெற்றி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியிருப்பதாவது:
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்கு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. ஏனெனில், முதலில் இந்தக் கொளுத்தும் வெய்யிலில் பந்துவீச்சாளர்கள் வீசுவதெல்லாம் பவுண்டரிகள், சிக்ஸர்களுமாக செல்கையில் நமக்கு சிந்திக்க மறந்துவிடும். என்ன செய்வதென தெரியாது. ஆனாலும் ஆடுகளம் எப்படி செயல்படுகிறதென எனக்குத் தெரியும்.
ஆடுகளத்தில் பந்து திரும்புமென நினைத்தோம். ஆனால், நடக்கவில்லை. சஹால் வரும்போது எந்தப் பாதிப்பும் நடக்கவில்லை. ராகுல் சிறப்பாக விளையாடினார். அதைப் பார்க்க கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
ராகுல் பெரிதாக இழுத்து அடிக்கவில்லை. வெறுமனே பந்தைப் பார்த்து விளையாடினார். 220-225 ரன்களை 2 ஓவர்கள் மீதமிருக்க சேஸ் செய்திருக்கிறோம். அதனால், மனநிலை ஒன்றுதான். முடிந்த அளவுக்கு பவர்பிளேவில் ரன்களைக் குவிக்க வேண்டும்.
ஓய்வறையில் நான் வீரர்களிடம் சொன்னது - அவர்களால் முடியுமென்றால் நம்மாலும் முடியும் என்பதுதான். அதுதான் எனது நம்பிக்கையாகவும் இருந்தது என்றார்.
Summary
I just said to myself that if they can, we can too says Punjab kings captain Shreyas iyer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

பஞ்சாப் கிங்ஸைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

