சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

புதிய ராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகள் பொறுப்பேற்பு!

இந்தியாவின் புதிய ராணுவத்தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவும் இன்று பொறுபேற்றுக் கொண்டனர்.        

Published On :

புதுதில்லி: இந்தியாவின் புதிய ராணுவத்தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவும் இன்று பொறுபேற்றுக் கொண்டனர்.        

இந்திய ராணுவத்தளபதியாக இருந்த ஜெனரல் தல்பிர் சிங் மற்றும் விமானப்படை தளபதியாக இருந்த ஏர் சீப் அரூப் ராஹா ஆகிய இருவரும் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து புதிய தளபதிகள் இருவரும் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராணுவத் தளபதி பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வானது தில்லி சவுத் பிளாக் அலுவலக வளாகத்தில்  அமைந்துள்ள புல்வெளியில்நடைபெற்றது.  அங்கு விடைபெற்றுச் செல்லும் தளபதிக்கு 'கார்ட் ஆப் ஹானர்' என்னும் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதேபோல கடற்படை தலைமையகமான வாயு பவனில் விடை பெற்றுச் செல்லும் தளபதி ராஹா மற்றும் புதிதாக பதவியேற்க உள்ள தளபதி தனோவா இருவருக்குமே 'கார்ட் ஆப் ஹானர்' என்னும் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.