ஆதர்ஷ் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அசோக் சவானிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், அந்த மாநில காங்கிரஸ் தலைவருமான அசோக் சவாண் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ஆதர்ஷ் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அசோக் சவாணிடம் விசாரணை நடத்துவதற்கு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அனுமதி கோரியிருந்தது.
இதுகுறித்து மாநில அரசின் கருத்தைக் கேட்டு, முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, அசோக் சவாணிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு அனுமதியளிக்கும்படி ஆளுநருக்கு மாநில அரசு பரிந்துரை செய்ததையடுத்து, ஆளுநர் இன்று அனுமதி அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.