/

காஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிப்போரா மாவட்டத்தில் இன்று காலை முதல் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

Updated On :4 பிப்ரவரி 2016, 6:47 am

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிப்போரா மாவட்டத்தில் இன்று காலை முதல் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

குஷி மோஹல்லா என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படை வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படை வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து பல மணி நேரம் நடைபெற்று வருகிறது. இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.