ஹரித்வாரில் இன்று அர்த்த கும்பமேளா: 15 லட்சம் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு
"தேவபூமி' எனப்படும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அர்த்த கும்பமேளாவின் இரண்டாவது நிகழ்வு திங்கள்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.


"தேவபூமி' எனப்படும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அர்த்த கும்பமேளாவின் இரண்டாவது நிகழ்வு திங்கள்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது. இதையொட்டி, கங்கை நதியில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கும்பமேளா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புனித நதிகளான கங்கை, க்ஷிப்ரா, கோதாவரி பாயும் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளா நடைபெறும். இதில், உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரிலும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்திலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அர்த்த கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இதன்படி, ஹரித்வாரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கிய அர்த்த கும்பமேளா, வரும் ஏப்ரல் மாதம் வரை 10 நிகழ்வுகளாக நடைபெற உள்ளன. இதன் இரண்டாவது கும்பமேளா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
ரூ.450 கோடியில் பணிகள்: இதையொட்டி, ஹரித்வாரில் சாலைகள், தங்குமிட வசதிகள், கழிப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்த, உத்தரகண்ட் மாநில அரசு சுமார் ரூ.450 கோடியை ஒதுக்கியுள்ளது.
தமிழக அதிகாரி: ஹரித்வாரில் அர்த்த கும்பமேளாவை சிறப்பாக நடத்தும் நோக்கில், இந்த விழாவின் பொறுப்பு அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த உத்தரகண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தினமணி' நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சோம அமாவாசை தினத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 8) அர்த்த கும்பமேளாவின் இரண்டாவது நிகழ்வும், பிப்ரவரி 12-ஆம் தேதி மூன்றாவது நிகழ்வும் நடைபெறுகின்றன. தொடக்க நிகழ்வின்போது, 13 லட்சம் பேர் புனித நீராடினர். அதனடிப்படையில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்வில் 15 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் புனித நீராடுவதற்கான அனைத்து வசதிகளும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கும்பமேளாவையொட்டி, உத்தரகண்ட் மாநில அரசு ஹரித்துவாருக்கு 500 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. தில்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்பட மாநிலங்களில் இருந்தும் சுமார் 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் நாட்டின் பிற முக்கிய இடங்களில் இருந்து ஹரித்வாருக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன என்றார் முருகேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...