சியாச்சின் பனிச்சரிவு: 9 ராணுவ வீரர்களின் உடல்கள் தில்லி வந்தது

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 9 ராணுவ வீரர்களின் உடல்களும் லடாக்கில் இருந்து இன்று தில்லி கொண்டு வரப்பட்டது.
சியாச்சின் பனிச்சரிவு: 9 ராணுவ வீரர்களின் உடல்கள் தில்லி வந்தது
Updated on
1 min read

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 9 ராணுவ வீரர்களின் உடல்களும் லடாக்கில் இருந்து இன்று தில்லி கொண்டு வரப்பட்டது.

தில்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் வைக்கப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

அங்கிருந்து வீரர்களின் உடல்களை, இந்திய விமானப் படையினர், புனே, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்குக் கொண்டு சேர்க்க உள்ளனர்.

பிப்ரவரி 3ம் தேதி சியாச்சின் பனி மலையில் நேரிட்ட பனிச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கினர். இதில் 6 நாட்களுக்குப் பிறகு உயிரோடு மீட்கப்பட்ட லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா கோப்பாட் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com