

மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தாணே மாநகர காவல் எல்கைக்குள்பட்டது கசார்வடாவலி பகுதியைச் சேர்ந்தவர் ஹசினில் வரேக்கர் (35). இவர் சொத்துத் தகராறு காரணமாக தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 14 பேரை சரமாரியாக நேற்று இரவு குத்திக் கொலை செய்தார்.
பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த போலீஸார் கொலை நடந்த வீட்டுக்குச் சென்று பிரேதங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.