ஜம்மு: அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க முதல்கட்டமாக 1,138 யாத்ரீகர்கள் கொண்டு குழு நாளை புறப்படுகின்றது.
மாநில துணை முதல்வர் நிர்மல் சிங், துணை அமைச்சர் பிரியா சேத்தி மற்றும் மக்களவை உறுப்பினர் ஜூகல் கிஷோர் ஆகியோர் முன்னிலையில் காலை 5 மணிக்கு ஜம்முவில் உள்ள பகவதி நகர் யத்ரா நிவாஸில் இருந்து யாத்ரீகர்கள் முதல் கட்ட குழு புறப்பட தயாரானது.
இந்த குழுவில் 900 ஆண்கள், 225 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் என மொத்தம் 1,138 பேர் 13 பேருந்துகள், 24 மினி பேருந்துகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அவர்களுடன் செல்ல உள்ளனர்.
அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் வழியில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், இந்தாண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லவிருக்கின்றார். மேலும் அவர் அமர்நாத் குகையை தரிசிக்க உள்ளார். நாளை தொடங்கும் யாத்திரை இந்தாண்டு 48 நாட்கள் வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


