ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பெண் பயணிக்கு உடல்நிலை பாதிப்பு: ஓமன் ஏர் விமானம் கோவாவில் அவசர தரையிறக்கம்

பெண் பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமன் ஏர் விமானம், கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2016, 8:12 am

பனாஜி: பெண் பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமன் ஏர் விமானம், கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7 மணியளவில், கோவாவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக டபோலின் விமான நிலைய இயக்குநர் புபேஷ் நேகி தெரிவித்துள்ளார்.

எனினும், அப்பெண்மணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். உடனடியாக அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மரணம் அடைந்த பெண் பயணியின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

பிறகு விமானம் திட்டமிட்டபடி கோவாவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.