ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலி

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Updated On :30 ஜூலை 2016, 7:23 am

ஸ்ரீநகர்: காஷ்மீரின் குப்வாரா பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு, இந்திய எல்லைப் பகுதியான நௌகாமில், பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றதை அறிந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளின் எதிர் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.