தில்லியில் பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து: 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

தில்லியில் ஜனக்பூரி பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Updated on
1 min read

புது தில்லி: தில்லியில் ஜனக்பூரி பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று காலை 6.30 மணியளவில், ஜனக்பூரி என்ற பகுதியில் ரிஷாப் (21) என்ற இளைஞன் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி, அங்குள்ள பாதசாரிகள் இருவர் மீது காரை ஏற்றியுள்ளான்.

இதில், காமேஷ்வர் பிரசாத் (40) மற்றும் அஷ்வினி ஆனந்த் (67) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சந்தோஷ் (40) பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கார் ஓட்டிய இளைஞரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com