பிகாரில் மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பிகார் மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
Updated on
1 min read

பாட்னா: பிகார் மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் இருந்து 150 கி.மீ தூரத்தில் அவுரங்கபாத்தில் உள்ள கிர்சிந்தி அரசு நடுநிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவுப் பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, 54 மாணவர்கள் நபிநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 6-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அபாயகரமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் பள்ளியில் விசாரணை நடத்துகையில், அப்பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள் உணவில் பல்லி விழுந்ததை கண்டதாக கூறியுள்ளனர். மாதிரி உணவை தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு ஆரம்ப பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் இறந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com