ஹைதராபாத், டிவின் நகரத்தில் மென்பொருள் பொறியாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன்ஜய் ஜங் (25). இவர் சதர்லேன்ட் குளோபல் சர்வீஸ்சில் பணியாறி வருகின்றார். நேற்று அதிகாலை செகந்திராபாத் ஸ்வப்னலோக் காம்ப்ளேக்ஸ் அருகே நடைபயணம் மேற்கொண்ட போது, திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் சன்ஜயை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த காரை போலீசார் மற்றும் பாதுகாவலர் (Security guard) பார்த்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மஹன்கலி போலீசார் வழக்கு பதிவு செய்து காவல்துறை துணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி தலைமையில் தனிக்குழு ஒன்று அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


