பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

"சர்வதேசத் தரம்: உயர் கல்வி நிறுவனங்கள் 3 மாதங்களுக்குள் தேர்வு'

உலகத் தரத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கான உயர் கல்வி நிறுவனங்கள் 3 மாதங்களுக்குள் தேர்வு செய்யப்படும் என்று மத்திய மனிதவள

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

உலகத் தரத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கான உயர் கல்வி நிறுவனங்கள் 3 மாதங்களுக்குள் தேர்வு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
 அண்மையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 10 தனியார் கல்வி நிறுவனங்களும், 10 அரசு கல்வி நிறுவனங்களும் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அதற்கான கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:
 நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்.
 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் இன்னும் 3 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.