நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுற்றுலா சீசனுக்காக காத்திருக்கும் ரிஷிகேஷ்!

தேவ பூமியான உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் நகரம், சுற்றுலா சீசனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

News image
Updated On :14 மார்ச் 2016, 7:11 pm

வே.சுந்தரேஸ்வரன்

தேவ பூமியான உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் நகரம், சுற்றுலா சீசனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
 இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு பகுதிகள் வழியாக பாய்ந்தோடி இறுதியில் சமவெளியை அடையும் ஹரித்வாரும், அதன் அருகே 25 கிலோ மீட்டர் முன்பகுதியில் அமைந்துள்ள ரிஷிகேஷ் நகரும் மிகவும் முக்கியமான புண்ணியத் தலங்களாகும். குறிப்பாக எழில் கொஞ்சும் மலைக் குன்றுகள் நிறைந்த ரிஷிகேஷுýம், அதன் ஊடாகப் பாய்ந்தோடும் கங்கையின் அழகிய தோற்றமும் காண்போரின் கண்களுக்கு மகிழ்வையும், மனதுக்கு அமைதியையும் தரத் தவறுவதில்லை.
 எப்போதும் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கையின் நதி ஓட்டத்தைப் பார்ப்பதற்காக நதிக் கரையின் அருகில் பலர் அமர்ந்திருப்பதைக் காணமுடியும். எனினும், அமைதியான கங்கை மாதா வெள்ளமாகக் கோபம் கொண்டு எழுந்தால், ஏற்படும் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை உணரச் செய்ததுதான் 2013-இல் உத்தரகண்டில் ஏற்பட்ட பெருமழை பேரிடர். இதனால், கடும் பாதிப்பை உத்தரகண்ட் மாநிலம் சந்திக்க நேரிட்டது. குறிப்பாக, "சார் தாம்கள்' எனப்படும் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்கான சாலைப் போக்குவரத்துத் தடைபட்டதால் யாத்ரீகர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது. சார் தாம்களுக்கு செல்லும் முக்கியச் சாலை மார்க்கமாக ரிஷிகேஷ் இருப்பதால் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் இடமாகத் திகழ்ந்து வருகிறது.
 புதிய ஜானகி தொங்கு பாலம்: ரிஷிகேஷ் கங்கை நதியின் குறுக்கே பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் நடந்து மறுகரைக்குச் செல்வதற்காக ஏற்கெனவே ராமன், லட்சுமண் ஆகிய இரு தொங்கு பாலங்கள் அமையப் பெற்றுள்ளன. தற்போது அதைவிட அகலமான பாலம் கங்கையின் குறுக்கே அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் பொதுப் பணித் துறை மூலம் ரூ.63 கோடியில் இந்தப் பாலப் பணி 2014-இல தொடங்கப்பட்டது. இந்தப் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 சீசனுக்கு காத்திருக்கிறோம்: ரிஷிகேஷ் சுற்றுலா சீசன் குறித்து வழிகாட்டிகள் சூர்யபிரகாஷ், சத்தியவான் ஆகியோர் கூறியதாவது: தற்போது அர்த்த கும்ப மேளா ஹரித்வாரில் நடைபெற்று வருவதால், அங்கு வரும் யாத்ரீகர்களில் சிலர் ஹரித்வாரும் வரத் தருவதில்லை. மாலை வேளையில் கங்கை நதிக் கரையில் நடைபெறும் ஆரத்தியில் கலந்து கொண்டு மனம் உருகிப் பாடி கங்கை தாயை ஆரத்தி எடுத்து வணங்குகின்றனர். தற்போது பள்ளித் தேர்வுகள் நடைபெற்று வருவதால், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் இல்லை. ஏப்ரல் மாதத்தில் "சார் தாம்கள்' பக்தர்களின் தரிசனத்திற்கு திறந்த பிறகு ரிஷிகேஷில் சுற்றுலாப் பயணகள் கூட்டம அதிகமாக வரத் தொடங்குவார்கள் என்றனர்.
 2013-இல் ஏற்பட்ட பேரிடருக்குப் பிறகு ஓராண்டு சுற்றுலாத் துறை மந்தமாக இருந்த்து. கடந்த இரு ஆண்டுகளாக பரவாயில்லை. தற்போது சுற்றுலா சீசன் தொடங்கவில்லை. "சார் தாம்கள்' யாத்திரை தொடங்கிய பிறகு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சுற்றுலாத் தொழில் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
 அடுத்த மாதம் ஏப்ரல் 14, 15 பைசாகி விசேஷ நாள்கள் என்பதால் ஹரித்வார் வரும் யாத்ரீகர்கள் அதிகளவில் ரிஷிகேஷ் வரக் கூடும். இந்தச் சமயங்களில் மாலை வேளைகளில் கங்கை ஆரத்தியைக் காண பக்தர்களும, சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக அவர்கள் கூறினர்.
 ரிஷிகேஷில் உள்ள ஆசிரமங்கள், தங்கும் விடுதிகளில் சிலவற்றில் இப்போதே தங்குமிட பதிவு மற்றும் வசதி குறித்து வெளியூர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் விசாரித்து வருவதாக ஆசிரம நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
 படங்கள்: டி.ராமகிருஷ்ணன்.
மன அமைதி தருகிறது!
 ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி - சமூக ஆர்வலர் அகிகோ இடோ கூறுகையில், "நான் ஐந்தாவது தடவையாக ரிஷிகேஷ் வந்துள்ளேன். இங்கு நடைபெற்ற யோகா விழாவில் பங்கேற்றேன். இந்த மலை, நதி, காற்று என இயற்கை அழகு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இது மன அமைதியைத் தருவதாக உள்ளது. இந்த இடத்தை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு இந்தியாவையும் பிடிக்கும் இந்தியர்களையும் பிடிக்கும்' என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.