தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எனது போராட்டம் வறுமைக்கு எதிராகத்தான்; கோகோய்க்கு எதிராக அல்ல: மோடி உரை

எனது போராட்டம் வறுமைக்கு எதிராகத்தானே தவிர அசாம் முதல்வர் தருண் கோகோய்க்கு எதிராக அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :26 மார்ச் 2016, 11:07 am

எனது போராட்டம் வறுமைக்கு எதிராகத்தானே தவிர அசாம் முதல்வர் தருண் கோகோய்க்கு எதிராக அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, அசாம் சட்டப்பேரவைத் தேர்தலே எனக்கு எதிராகத்தான் என்று கோகோய் கூறியுள்ளார். ஆனால், எனக்கு அவருக்கு எதிராக போராட எதுவும் இல்லை. அதில்லாமல், நமது கலாச்சாரத்தில் வயதில் மூத்தவர்களுடன் சண்டையிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வயதில் மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியா சுதந்திரம் பெற்ற போது, வளமான மாநிலமாக பிகார் திகழ்ந்தது. ஆனால், தற்போது ஏழை மாநிலங்களில் ஒன்றாகிவிட்டது.

நீர்வளம் மிகுந்த மாநிலத்தில், மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், அசாமில் இன்னமும் 2000 கிராமங்களுக்கு மேல் மின்சார வசதி செய்து தரப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

முன்னதாக இந்த மாத துவக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோகோய், அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எனக்கும் இடையிலான நேரடி மோதல் என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.