ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மல்லையாவை திருப்பி அனுப்ப முடியாது, வேண்டுமானால் சரணடையுமாறு கூறுங்கள்: இங்கிலாந்து

வங்கி மோசடி வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும், வேண்டுமானால் அவரை சரணடையுமாறு அறிவுறுத்துங்கள் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :11 மே 2016, 12:46 pm

சென்னை: வங்கி மோசடி வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும், வேண்டுமானால் அவரை சரணடையுமாறு அறிவுறுத்துங்கள் என  இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

வங்கிகளில் ரூ. 9400 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்த இயலாத தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனிடையே, தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றுவிட்டார்.

இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை முடக்கிய இந்திய அரசு, மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு கடிதம் அனுப்பியது.

இரண்டு வாரத்துக்குப் பின்னர் அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள இங்கிலாந்து அரசு, மல்லையாவை திருப்பி அனுப்ப இயலாது என்றும், வேண்டுமானால் அவரை சரணையுமாறு கூறுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் குடியேற்ற சட்டத்தின்படி, ஏற்கெனவே அங்கு சென்றுள்ள நபர், தொடர்ந்து தங்கியிருப்பதற்கு கட்டயாம் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், மல்லையா விஷயத்தில் இந்திய அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் இங்கிலாந்து அரசு தகவல் தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.