ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அப்ரூவர் ஆகிறார் கார் ஓட்டுநர்

மும்பையில் நடந்த ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, ஷீனாவின் தாய் இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷாம் ராய் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மே 2016, 12:29 pm

மும்பை : மும்பையில் நடந்த ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, ஷீனாவின் தாய் இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷாம் ராய் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஷீனா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள கார் ஓட்டுநர் ஷாம் ராய் அப்ரூவராக மாறி, சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அளிக்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஷீனா போரா கொலையில் தமக்கு தெரிந்த உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புவதாகவும், தனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாம் ராய், எந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் இல்லாமல், தனது சுய விருப்பத்தின் பேரிலேயே அப்ரூவராக மாறியதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து ஷாம் ராயை அப்ரூவராக சேர்த்துக் கொள்வது குறித்து பதில் அளிக்கும்படி சிபிஐ வழக்குரைஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.