புது தில்லி: விளம்பரப் படங்களில் நடிக்கும் பிரபலங்களே அதன் நம்பகதன்மைக்கும் பொறுப்பேற்கும் வகையில் நுகர்வோர் சட்டம் திருத்தப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர்கள், பிரபலங்கள் மீது ரூ. 50 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடரலாம்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, உணவு மற்றும் நுகர்பொருள் துறையின் அமைச்சர் ராமவிலாஸ் பாஸ்வான், மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2016-க்கு நாடாளுமன்றம் நிலைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது அமலில் இருக்கும் 1986 ஆண்டைய நுகர்வோர் சட்டத்துக்குப் பதில் இப்புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றார் பாஸ்வான்.
விளம்பரப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பொருள்களுக்கு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். தரமற்ற பொருள்களை ஏமாற்றி விளம்பரம் செய்தால், விளம்பரத்தில் நடிப்பவர்களிடமிருந்து ரூ. 50 லட்சம் வரை நஷ்டஈடு கோரலாம். மேலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
புதிய சட்டத்தின்படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மையங்கள் இனி ரூ. 1 கோடி வரையிலான புகார்களையும், மாநில நுகர்வோர் குறைதீர் மையங்கள் ரூ.14 கோடி வரையிலான புகார்களையும் விசாரிக்கலாம் என்றார் பாஸ்வான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னக்குழியா பாடல்!

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
எம்.பி.க்கள் விலகல்! பாஜகவில் சில நாள்கள் மட்டுமே அமைச்சர், பின்னர் சாதாரண பணியாளர்தான்: ஹர்பல் சிங்

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


