ரூபாய் நோட்டுகள் விவகாரம் : விவசாயிகளுக்கு மத்திய அரசு புதிய சலுகை!
விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படும் விதைகளை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


புது தில்லி: விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படும் விதைகளை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படும் விதைகளை பழைய 500 ரூபாய் நோட்டுகளை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்
அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் விதை மையம், மாநில அரசால் நடத்தப்படும் பல்வேறு விதை விற்பனை நிலையங்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் இந்த சலுகையை பெறலாம்.அவர்கள் தகுந்த அடையாள ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எதிர்வரும் ராபி சாகுபடி பருவத்தை சரியான முறையில் எதிர்கொள்ள விவசாயிகள் தயாராக இருக்கும் பொருட்டு, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...