குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சும் பிரதமர்: கெஜ்ரிவால் கடும் தாக்கு!

ருபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில்  நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சி பிரதமர்: மோடி தவிர்க்கிறார் என்று அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :23 நவம்பர் 2016, 11:51 am

புதுதில்லி: ருபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சி பிரதமர்: மோடி தவிர்க்கிறார் என்று அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் ருபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும், அதில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  இதனால் எழுந்துள்ள பிரச்சினைகளினால் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் தவித்து வருகிறது.   

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மோடியின் செயல்பாடுகளை தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் காட்டமாக விமர்சித்துள்ளார்.அவர் இன்று தனது டிவிட்டர்  பக்கத்தில், 'நாடாளுமன்றத்திற்கு செல்லுமாறு பிரதமருக்கு ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும். நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சும் முதல் பிரதமர் இவர்தான்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.