அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம்: சூறாவளி பேரணிகளில் பங்கேற்கும் கெஜ்ரிவால்!

பழைய 500 மற்றும் 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, நாடு முழுவதும் அடுத்த நான்கு வாரங்களில், ஆறு பேரணிகளில் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் பங்கேற்கிறார்.

News image
Updated On :24 நவம்பர் 2016, 9:41 am

புதுதில்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, நாடு முழுவதும் அடுத்த நான்கு வாரங்களில், ஆறு பேரணிகளில் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் பங்கேற்கிறார்.

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று  கடந்த 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி அறிவித்தார்,. இதை பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்த உத்தேசித்துள்ளது.

இது தொடர்பாக தில்லியில் இன்று அக்கட்சித் தலைவர் ஆஷிஷ் கேதான் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் என்ற பெயரில் நடைபெறும்  இந்த 8 லட்சம் கோடி ரூபாய் ஊழலை எதித்து நவம்பர் 28-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆம் ஆத்மி கட்சி போராட்டங்களை  நடத்த உள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் மீரட், வாரணாசி மற்றும் லக்னோ  ஆகிய இடங்களில் முறையே டிசம்பர் 1,7 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும், போபால், ராஞ்சி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் முறையே 20,22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்க உள்ளார்.

இவ்வாறு கேதான் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.