திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் கடந்த 24-ம் தேதியன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் பலியான விவகாரத்தில் நீதி விசாரணைக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. மேலும் அவர்கள் தொடர் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 24-ம் தேதியன்று மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை ஷங்கர் என்னும் தேவராஜ் மற்றும் காவேரி என்னும் அனிதா ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் போலீசாரின் போலி என்கவுன்ட்டராக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. காவல்துறை மீது குற்றம்சாட்டிய மனித உரிமை ஆர்வலர்கள் இவ்விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி மாநில குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹெரா நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், நிலம்பூர் என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


